முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலை வியாபார நோக்கோடு செய்கின்றனர்

முஸ்லிம் அரசியல்வாதிகள்

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலை வியாபார நோக்கோடு செய்கின்றனர்

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலை வியாபார நோக்கோடு செய்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு மக்கள் விடுதலை முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாழைச்சேனையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

இந்த நாட்டின் அரசாங்கம் ஏமாற்றுத் தன்மை காரணமாக பிளபுபட்ட நிலையில் இருக்கின்றனர் இலங்கையில் அதிக பணம் உழைப்பது தூள் வியாபாரத்தின் மூலம் ஆனால் தற்போது அரசியலின் மூலம் தான் அதிக பணம் உழைக்கின்றனர் தூள் வியாபாரிகள் பொலிஸைக் கண்டால் பயப்பிடுகின்றனர் ஆனால் அரசியல் வாதிகளுக்கு சலூட் அடிக்கின்றனர் இங்கு அரசியலின் மூலம் அதிக பணம் உழைக்கின்றனர்.

முஸ்லிம் தலைவர்கள் அரசியல் வேசம் போட்டு மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணிலிடம் போய் இங்கு பெறும் வாக்குகளை காட்டி என்ன தருவீர்கள் என்று பேச்சுவார்த்தை நடாத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். வளவு விற்கும் தரகர்கள் போன்று சென்று வாக்குகளை விற்கின்றனர்.

இந்த நாட்டில் மஹிந்த ஆட்சிக் காலம் மைத்திரி ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு இந்த அரசாங்கம் இவ்விடயம் சார்பாக ஏதும் கதைத்தார்களா? பேருவளை பள்ளியவாயல் உடைத்த போது பாராளுமன்றத்தில் என்னால் விவாதம் எழுப்பிய போது ரவூப் ஹக்கீம் எழும்பி சென்று விட்டார், றிசாட் பதியூதீன் பாராளுமன்ற அமர்வுக்கு வரவில்லை. இவர்கள் வியாபாரத்திற்காக ஒன்று சேர்ந்து விட்டு பின்னர் தேர்தல் நடைபெறவுள்ள சில தினங்களுக்கு பின்னர் மாறினர்.

கொழும்பில் இருந்து மாபிள் விற்பனைக்கு வியாபாரிகள் இங்கு வருகின்றனர் ஆனால் ரவூப் ஹக்கீம் இங்கிருந்து கொழும்புக்கு வாக்குகளை கொண்டு சென்று விற்பனை செய்கின்றார். யாரோடு அரசியலில் இருந்தாலும் பரவாயில்லை மக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும். பாராளுமன்றத்துக்கு உள்ளே வர வெளியோ போக, தேர்தலுக்கு முன்னும் பின்னும் பணம் வாங்குகின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிமரசிங்க முப்பது கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு காரினை வாங்கியுள்ளார். ஆனால் அவர் பாராளுமன்றத்துக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ காரில் செல்வதில்லை. ஹெலிகொப்டரில் தான் செல்கின்றார் என்றால் கார் எதற்கு வாங்கினார்.

ஜனாதிபதி மைத்திரி வீதியில் வருதென்றால் இரண்டு கார் வரலாம். ஆனால் ஆகாய மார்க்கமாக வருவதற்கு எதற்கு இரண்டு ஹெலிகொப்டர் வர வேண்டும், இடையில் பழுதடைந்தால் மேலிருந்தவாறே மற்றைய ஹெலிகொப்டரில் மாறிக் கொண்டு செல்வதற்கா என கேட்கின்றேன் என்றார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் அரசியல்வாதிகள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]