முஸ்லிம்கள் விளக்கமில்லாமல் ஆதரவு வழங்கியுள்ளனர்- கருணா

முஸ்லிம்கள் விளக்கமில்லாமல்அரசாங்கம் கொண்டுவரவுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு கிழக்கு மாகாண சபை விளக்கம் இல்லாமல் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது எனவும் கருணாம்மான் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மத்தியகுழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த 20 ஆவது சட்டத்தில் ஒரு வசனம் சிங்களத்தில் சேர்க்கபட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் கூட மொழி பெயர்ப்பு இல்லை இதற்கு சம்பந்தனும், சட்ட ஆலோசகர் சுமந்திரனும் சேர்ந்து வாக்களித்துள்ளார்கள்.