மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான காணியின் ஒரு பகுதியை முஸ்லிம்கள் சட்டத்திற்கு முரணாக அபகரித்து குடிசை அமைத்துள்ளதைக் கண்டித்தும் காணியை மீள ஒப்படைக்குமாறு கோரியும் இன்று செவ்வாய்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
முறாவேடை சக்கதி வித்தியாலய பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் கிராபம மக்களும் கலந்துகொண்டனர்.
குறித்த மைதான காணியானது கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் இலங்கை நில அளவை திணைக்களத்தின் பி.பி.மட்2788 எனும் இலக்கம் கொண்ட வரைபடத்தைக் கொண்டதும், காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்தின் EP/28/LB/HO/BAT/KO/P14 கடிதம் மூலம் கையளிப்புச் செய்யப்பட்ட காணியாகும். இக்காணியை பாடசாலை மாணவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
சமீப காலமாக இக்காணியினும் தற்காலிக குடிசையமைத்து வேலிகளுமிட்டு பாடசாலை மைதான காணி சூரையாடப்பட்டுள்ளது. நில பகரிப்பு தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்கவில்லை மைதான காணி தொடர்பான பிரச்சி;னைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
எங்கள் மைதானம் எங்களுக்குத் தேவை, அகற்று அகற்று வேலியை அகற்று, நாங்கள் விளையாட எங்கள் மைதானம் தேவை, மைதானத்தை விட்டு வெளியேறு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களையெழுப்பியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போரட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]