முஸ்லிம்களும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் – சுமந்­தி­ரன்

இந்த நாட்­டில் எண்­ணிக்­கை­யில் சிறு­பான்­மை­யாக வாழ்ந்து வரு­கின்ற தமிழ் மக்­கள் தலை­நி­மிர்ந்து உரிய உரித்­து­டன் வாழ வேண்­டு­மா­னால், சிறு­பான்­மை­யி­ன­மாக வாழ்­கின்ற முஸ்­லிம் மக்­க­ளும் மிடுக்­கு­டன் வாழ­வேண்­டும். இவ்­வாறு தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­காக தேர்­த­லில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் சார்­பில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை அறி­மு­கம் செய்­யும் கூட்­டம் ஒஸ்­மா­னி­யக் கல்­லூ­ரிக்கு அரு­கில்  நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்த­தா­வது-:

இலங்­கை­யில் இடம்­பெற்ற போரின் கார­ண­மாக தமிழ் சமூ­கம் பல உயிர்­களை இழந்து பலர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். இழப்­புக்­க­ளைச் சந்­தித்­த­னர். சிங்­கள சமூ­க­மும் இழப்பை சந்­தித்­தது. முஸ்லிம் சமூ­க­மும் இழப்பை சந்­தித்­தது.

எதிர்­வ­ரும் உள்ளூ­ராட்சி தேர்­த­லில் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் வவு­னி­யா­வில் 3 சிங்­கள சகோ­த­ரர்­க­ளும், கிழக்­கில் முஸ்லிம்­க­ளும் எமது பட்­டி­ய­லில் இணைந்து போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

தற்­போது அனைத்­துக் கட்­சி­க­ளும் இணைந்து புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்சி நடை­பெற்று வரு­கின்­றது. வட­ம­ராட்­சி­யில் நடந்த கூட்­டத்­தில் ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­னோம் என நான் கூறி­னேன் என்று பத்­தி­ரிகை ஒன்­றில் போடப்­பட்­டுள்­ளது. நான் பகி­ரங்­க­மாக சவால் விடு­கி­றேன் இவ்­வாறு கூறி­னேனா?.

ஊட­கத்­துக்­குப் பயந்து நாம் பொய் கூற முடி­யாது. ஊட­கத்தை பகைத்து தேர்­த­லில் வெல்ல முடி­யாது எனச் சிலர் கூறு­கின்­ற­னர்.

அர­சி­ய­லில் குழப்­பும் அர­சி­யல் சக்­தி­கள் போன்று ஊட­கங்­க­ளும் பொய்­யு­ரைக்­கின்­ற­ன. அந்த நிலை மாற்­றப்­ப­டும். இது இடைக்­கால அறிக்­கைக்­கான தேர்­தல் அல்ல. நகர அபி­வி­ருத்­திக்­கான தேர்­தல் என்­றார்.