‘முஸ்லிம்’களுக்கு ஆதரவாக களமிறங்கிய மனோ!!

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை இனக்கலவரம் தொடர்பாக கடுமையான முறையில் அதிருப்தியை வௌியிட்டிருந்தார்.

அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் நல்லாட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கையை தகர்த்துவிடும் என்று அவர் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு ஆதரவாக கருத்து வௌியிட்ட அமைச்சர் மனோ கணேசன், அம்பாறை இனக்கலவரத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சித்துள்ளார்.

பெரும்பான்மையினத்தவர் குற்றம் சாட்டுவது போன்று உணவில் ஏதேனும் நச்சுப்பொருள் கலக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து சுகாதாரத் துறை உதவியுடன் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே தவிர வன்முறை அணுகுமுறைகளை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று உரத்த குரலில் அமைச்சர் மனோ கணேசன் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

இதன்போது சங்கடத்துடன் நௌிந்த ஜனாதிபதி மைத்திரிபால அமைச்சர் தயா கமகே இருந்த பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார். அம்பாறை வன்முறை தொடர்பாக தானும் கண்டனம் தெரிவிப்பதாக அமைச்சர் தயா கமகே சமாளித்துள்ளார்.

அதன் பின்னர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இந்த விவகாரம் தொடர்பில் தனது கண்டனத்தை வௌிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அமைச்சரவையில் சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராக கடுமையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் மனோ கணேசன் முஸ்லிம்களின் தரப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை வௌிப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக அமைச்சரவைக் கூட்டத்தின் போது எந்தவொரு அமைச்சரும் அம்பாறைக் கலவரம் தொடர்பாக எதிர்க்கருத்துக்களை முன்வைக்கத் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]