முஷரப்புக்கு இறுதிக் கெடு

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப் நாளைய தினத்துக்குள், அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப் மீது அந்நாட்டு அரசாங்கம் தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது.

அத்துடன், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியதால் தலைமறைவு குற்றவாளியாக முஷரப் அறிவிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

மேலும், சர்வதேச பொலிஸார் ஊடாக முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், முஷரப்பின் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன நீதிமன்றத்தால் முடக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்நாட்டு தேசிய தகவல் பதிவு மையத்தின் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில், முஷரப்பின் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கத்தை நீதிமன்றம் நேற்று தடைசெய்துள்ளது.

இந்நிலையில், வழக்கு விசாரணையில் இன்றைய தினம் முஷரப் முன்னிலையாக வேண்டும் என, இறுதி கெடு விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]