சினிமாவுக்கு முழுக்கு போடும் கமல்

கமல்

அரசியல் பிரவேசம் பற்றியும், அரசியல் பிரவேசத்திற்குப் பின் சினிமா பற்றியும் கருத்துத் தெரிவித்தார் கமல். தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்தவே கட்சி தொடங்குகிறேன். கிராமங்களுக்கு உதவுவதே எனது எண்ணம். தமிழ்நாட்டை நாளைய தமிழர்களுடையதாக மாற்ற வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய பிரதேசமாக மாற வேண்டும் என்பதே எனது கனவு.

ஏற்கனவே நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு அங்கும் இங்குமாக பணி செய்தோம். இனி அரசியலில் ஈடுபடுவதன் மூலம் மையத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்வோம். எனக்கு பிறகும் எனது கட்சி மூலம் இது தொடர வேண்டும்.

அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாக கூறுகிறீர்கள். திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு கமல்ஹாசன் அளித்த பதில் வருமாறு:-

தீவிர அரசியலில் இறங்கும் போது திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை.

கமல் தீவிர அரசியலில் இறங்குகிறார். எனவே, கமல் ஏற்கனவே நடித்துள்ள 2 படங்கள் திரைக்குவரும். அதன் பிறகு அவர் வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை. இதனால் ‘இந்தியன்-2’ படத்தில் கமல் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

கமல்கமல்கமல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]