முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்று

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஒன்பதாவது ஆண்டாகவும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இன்றைய தினத்தை துக்க நாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வட மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து இன்று நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று முதல் இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை வட மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]