முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் அரசியல் செயற்பாடுகளுக்கு இடமில்லை!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதினத்தில் அரசியல் கட்சிகளின் கட்சிசார் அரசியலுக்கு இடமளில்லை, தமது சுயலாப அரசியலையும், தனிப்பட்ட கட்சிகளை விமர்சிப்பதற்கும் அனுமதிக்க முடியாதென்பதுடன், அரசியல்வாதிகளின் உரைகள் 2 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ்.மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மறைமாவட்ட நீதி சமாதானத்திற்கான ஆணைக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு கொழும்புத்துறை குருமடத்தில் இன்று (04) பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றது.

அதன்போதே ஆணைக்குழுவின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடாத்தப்படுமென்றும், தனிப்பட்ட வகையில், தனிக்கட்சிகள் தனியான இடங்களில் நடாத்தாது. பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவுகூற முன்வருமாறும் அனைவரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கும், மாற்றுக்கட்சிகளை நோக்கி முன்வைக்கும் கருத்துக்களுக்கும் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் இடமில்லை.
இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவருவபர்கள் அமைதியாக அஞ்சலி செலுத்த வேண்டுமென்பதுடன், இறந்தவர்களின் ஆத்ம சாந்தியடை பிரார்த்திக்க வேண்டும்.
உரையாற்றுவதற்கு அனுமதியில்லை.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக உரையாற்றுவதற்கு அனுமதிக்கமுடியாது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு உரைகள் தடையாக இருந்தன. அவை எமக்குப் மிகப்பெரிய அனுபவம். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மிகவும் அமைதியான முறையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூற வேண்டுமென்பதுடன், அஞ்சலி நிகழ்வுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் கட்சிசார் அரசியலாக பார்க்கப்படுகின்றது. அரசியல் கட்சிகள் தமக்கு விரும்பிய பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வினை நடாத்துவது வேதனைக்குரிய விடயம். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதை தவிர்த்து அரசியல் லாபத்திற்காக அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுக்கின்றார்கள். அவ்வாறான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கான ஒரு இடமே முள்ளிவாய்க்கால், எமது பலமும், எமது ஒற்றுமையையும் பலப்படுத்துவதுடன், எமது புதிய அத்தியாயத்திற்கான ஒரு இடமாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூற வேண்டும். கண்ணீர் சிந்த வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கட்சி சார் அரசியல் இன்றி, பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் சரியான முறையில் நெறிப்படுத்தப்பட்ட நிகழ்வாக நடாத்த வேண்டும்.எமது மக்கள் மத நம்பிக்கையுடையவர்கள், மத அனுஸ்டானங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அண்மையில் மத நிகழ்வுகளின் போது, பொது மக்கள் தமது நினைவு கூர்ந்ததையும், தமது அஞ்சலிகளைச் செலுத்தியதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். பல்கலைக்கழக மாணவர்கள், அஞ்சலி நிகழ்விற்கு வருபவர்களை ஒழுங்குபடுத்தி, மதப் பெரியார்களை ஒருங்கமைத்து செயற்படுத்துவார்கள் என்றும் அத்துடன், அரசியல்தலைவர்கள் தமக்கு இடம் கொடுக்க வேண்டுமென்றால், அது சிக்கலுக்குரிய விடயம்.

பல்கலைக்கழக மாணவர்கள், அரசியலைப் பேசமால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்ற கடுமையான உத்தரவினைப் பிறப்பிப்பதற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிமை இருக்கின்றது.அரசியலுக்கு அப்பால், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு 2 நிமிடங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய ஒருங்கமைப்புக்களைச் செய்து இரண்டொரு நிமிடங்கள் பேச இடமளிக்கமுடியும்.

அரசியல்வாதிகள் நீண்ட உரையாற்றுவதற்கு இடமளிக்காமல் இருப்பதுடன், அவ்வாறு நீண்ட உரையாற்றவதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியுமென்றும் குறிப்பிட்டனர்.

கட்சியினரையோ, தனிப்பட்டவர்களையோ விமர்ச்சிக்கக்கூடாது என கட்டளை கொடுத்து, குழப்பத்தினைத் தவிர்த்து அரசியல்வாதிகள் உரையாற்ற அனுமதிக்க முடியும். அதற்குரிய ஏற்பாடுகளை பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய பங்கெடுப்பார்கள்.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான அடையாளச் சின்னம் முள்ளிவாய்க்கால், கட்சிசார் அரசியல் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் முன்வைக்கக்கூடாது. எந்தவொரு கட்சியும் தமது சுய அரசியல் லாபத்திற்காக முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தினை, அரசியல் ஊன்றுகோலாக பாவிக்கக்கூடாது. பொது மக்களின் வேதனைகள் நியாயப்படுத்தப்பட வேண்டும். பொது மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அங்கு உயிரிழந்தவர்கள் எமது மக்கள்.

அஞ்சலி எமது மக்களின் வேதனைகளின் வெளிப்பாடு அவற்றினை வெளிப்படுத்த மிகவும் சிறப்பான முறையில் ஒருங்கமைக்கப்பட்டு, எமது மக்களின் நினைவுகள் நினைவுகூறப்பட வேண்டுமென்பதுடன், அஞ்சலிகளும் செலுத்தப்பட வேண்டும். தனிக்கட்சிகள் தமது அரசியலை நடாத்துவதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வுகளில் இடமளிக்கப்படாது என்பதனை ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தினை பொது ஏற்பாட்டின் ஒருங்கமைப்பினை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுப்பார்கள். ஏனையோர்கள் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை.

தூர நோக்குடன், செய்ய வேண்டிய ஒன்று, தமது உறவுகளை இழந்தவர்கள், தமது நினைவுகளை கூற அங்கு இடமளிக்க வேண்டும். அவற்றிற்கு ஆதரவு வழங்க வேண்டியது அனைவரின் கடமையும் பொறுப்புமாகும்.
கட்சி பேதம் கடந்து மனித நேயம் என்ற அடிப்படையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் ஒன்றுபடுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]