முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிப்பு (படங்கள்)

தமிழ் இனப்படுகொலையின் 8 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்று வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

முள்ளிக்குளம் கப்பலடி பாதையில் 9.30 க்கு ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ.சரவணபவன், மற்றும் வட்டரக்க விஜித்த தேரர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வடமாகாண முதலமைச்சர் மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோர் பொது சுடர் ஏற்றியதுடன் நினைவேந்தல் உரையையும் நிகழ்த்தினார்கள்.

இரா. சம்பந்தன் நினைவேந்தல் உரையாற்றிக்கொண்டிருந்த போது அரசியல் பேசுவதாக தெரிவித்து சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் முள்ளிவாய்க்கால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]