முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பான கலந்துரையாடல்!!

மே 18 ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அஞ்சலி நிகழ்வுகள் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நினைவுகூறுவதற்கான ஏற்பாட்டுக் செய்யயும் கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இந்த கலந்துரையர்ல் ஆரம்பமாகியது.
இக்கலந்துரையாடலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் , வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா மற்றும் யாழ்.மறைமாவட்ட பங்குத் தந்தையர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 07 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதின அஞ்சலி நிகழ்வுகள் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறுமென்றும் அந்த நிகழ்வில் யாழ். ப்பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் தமக்கான பொறுப்புக்களைப் பெற்று நினைவேந்தல் நிகழ்வில் பங்களிப்புச் செய்யுமாறு வடமாகாண முதலமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]