முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரம் செம்மணிப் புதைகுழிப் பகுதியில் இன்று (12) ஆரம்பமாகியது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இன்றுக்காலை 10.00 மணியளவில் யாழ். செம்மணி பகுதியில் செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்ட சுண்டுக்குழி மகளீர் கல்லூரி மாணவி கிரிசாந்தி மற்றும அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 600 பேர் வரையானவர்கள் புதைக்கப்பட்ட பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
பொது ஈகைச் சுடரினை வடமாகாண சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஏற்றி வைத்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கை அரச படைகளினாலும் அதன் ஆதரவுடனும் கடந்த 70 வருடங்களாக நடாத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, தமிழ் இனத்திற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதி கிடைக்க வேண்டுமென்று சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இனப்படுகொலை வாரம் (12) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]