முள்ளியவளை பாடசாலையில் பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி

“பாதுகாப்பான எதிர்காலம் – மைத்ரி ஆட்சி” என்ற தொனிப்பொருளின் கீழ் போதைப்பொருளிலிருந்து விடுதலை பெற்ற நாட்டை உருவாக்குவதற்கு செயற்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தின் கீழ் தேசிய போதைப்பொருள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (21) முற்பகல் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

முள்ளியவளை முள்ளியவளை முள்ளியவளை முள்ளியவளை

பாடசாலைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டார். இந்த தேசிய வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அவர்களால் பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்று நடப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான உறுதிமொழியை வழங்கியதன் பின்னர் செயற்திட்டங்கள் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும் அரசாங்கத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி அவர்கள் குறித்த ஆவணங்களை மாவட்ட செயலாளர்களிடம் கையளித்தார். அமைச்சர்களாகிய தயா கமகே, ரிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]