முகப்பு History முள்­ளி­வாய்க்­காலில் நினை­வு­த்தூபி அமைப்­ப­தற்கு ஜனா­தி­ப­தியிடம் வலியுறுத்தல்!!

முள்­ளி­வாய்க்­காலில் நினை­வு­த்தூபி அமைப்­ப­தற்கு ஜனா­தி­ப­தியிடம் வலியுறுத்தல்!!

முள்­ளி­வாய்க்­காலில் நினை­வு­த்தூபி அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை தேவை ஜனா­தி­ப­தியை இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேரில் சந்தித்து வலியுறுத்தல்இறுதி யுத்­தத்தின்போது உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூர்ந்து முள்­ளி­வாய்க்­காலில் நினை­வு­த்தூபி அமைக்க உட­னடி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வை நேற்று நேரில் சென்று வலியுறுத்தினார்.

நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த திருமதி விஜயகலா மகேஸ்வரன் இந்த நினைவு தூபியை அமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தாம் இது தொடர்பில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கி ஆதரவு பெற்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் விஜயகலா மகேஸ்வரன் இது குறித்து ஜனா­தி­ப­தியிடம் கடி­த­மொன்­றையும் கையளித்தார்.  இந்தக் கடி­தத்தின் பிரதி பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்த்­தன, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஒஸ்டின் பெர்­னாண்டோ, பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ஆகி­யோ­ருக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-
இறுதி யுத்­தத்தின்போது பெருந்­தொ­கை­யான அப்­பா­வி­மக்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், மன்னார், முல்­லைத்­தீவு, வவு­னியா ஆகியமாவட்­டங்­களை சேர்ந்த மக்கள் இறுதி யுத்­தத்தின்போது முள்­ளி­வாய்க்­காலில் பலி­யா­கினர்.

படைத்­த­ரப்­பி­ன­ருக்கும் புலி­க­ளுக்­கு­மி­டை­யி­லான பரஸ்­பர மோத­லிலும் தாக்­கு­தல்­க­ளிலும் இத்­த­கைய உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. 2009ஆம் ஆண்டு இடம்­பெற்ற இந்த உயி­ரி­ழப்­புக்­களை நினை­வு­கூரும் வகையில் முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்தல் நிகழ்வு நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­த­தை­ய­டுத்து மே மாதம் சுதந்­தி­ர­மான முறையில் முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்தல் நிகழ்வு நடத்­தப்­பட்­டது.

இவ்­வாறு யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூரும் வகையில் முள்­ளி­வாய்க்­காலில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படவேண்டியது அவசியமான தாகும். இதற்கான தேவையான நடவடிக் கைகளை விரைந்து எடுக்கவேண்டும் என்று
தங்களிடம் கோருகின்றேன் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com