முள்­ளி­ய­வ­ளை­யில் வாள்வெட்டு

முள்­ளி­ய­வ­ளை­ வாள்வெட்டு

முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வ­ளை­யில் நேற்று இரவு நடந்த வாள்­வெட்டு மற்­றும் தாக்­கு­த­ல் சம்பவங்களினால் இரு­வா் படு­கா­ய­ம­டைந்­துள்ளனர்.

இந்­தச் சம்­ப­வம் கடந்த இரவு 7 மணி­ய­ள­வில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முள்­ளி­ய­வளை 4 ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த ஜெய­சீ­லன் ஜனு­ராஜ் (வயது 20), முள்­ளி­ய­வளை 2ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த தங்­க­ராசா டியானு (வயது20) ஆகி­யோரே காய­ம­டைந்­த­னர்.

ஒரு­வர் வெட்­டுக்­கா­யங்­க­ளு­ட­னும், மற்­றை­ய­வர் கா­யங்­க­ளு­ட­னும் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட வாய்த்­தர்கம் முற்றி கைகலப்பில் முடிந்துள்ளதாகவும் முள்­ளி­ய­வளை சந்­தைக்கு அண்­மித்த பகு­தி­யில் வைத்து வாள், கோட­ரி­க­ளால் தாக்­கு­தல் நடத்­தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் ­முள்ளிய­வ­ளைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]