முல்லைத்தீவு மோதலில் ஐவர் காயம்

முல்லைத்தீவு, குமுழமுனை பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தின் பின்னர் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேரும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட தகராறு காரணமாகவே மோதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]