முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை நிறுத்த வேண்டும்

“முல்லைத்தீவு மாவட்டத்தில், காடழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை ஒரு போதும் ஏற்க முடியாது” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மேலும், “இக்குடியேற்றங்களுக்கு, அரசியல் அதிகாரம் கொண்டவர்களுடன் இணைந்து மாவட்ட செயலாளர் உட்பட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களும் துணைபோகின்றனர்” என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அண்மைக்காலமாக, முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களுடைய குடியேற்றம் தொடர்பில் குழப்பகரமாக பதற்ற நிலை காணப்படுகின்றது.

“யுத்தத்துக்கு முன்னர், முல்லைத்தீவில் இருந்தவர்கள் மீண்டும் இங்கு வரும் போது வீட்டுக்கு உரிய காணி இல்லை என்ற ரீதியில், அவர்களுக்கான காணி வழங்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.முல்லைத்தீவு

“இங்கு அரசியல் ரீதியாக ஒரு பகுதி மக்களுக்கு ஒரு விதமாகவும் இன்னுமொரு பகுதி, மக்களுக்கு வேறோரு விதமாகவும் சட்டங்கள் நடமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால்தான் குழப்பங்களும் உருவாகின்றன.

“கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாற்றுக்கேணி பிரதேசத்தில் 1953ஆம் ஆண்டு 136 பேருக்கு 4 ஏக்கர் வீதம் மகாவலி திட்டத்தின் கீழ், காணி வழங்கப்பட்டது. அக்காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மீண்டும் அக்காணிகள் வழங்கப்படும் என்று அத்திட்டத்தின் பணிப்பாளரால் 2016ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்டது.

“இருப்பினும் இன்று வரை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முஸ்லிம் மக்களுடைய குடியேற்றம் தொடர்பாக மாவட்ட செயலாளர் காட்டும் அக்கறையை மகாவலித் திட்டத்தில் காட்டுவதில்லை. முதலில் மாவட்ட செயலாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களையும் சமமாக மதிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]