முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் 7.5 ஏக்கர் காணிகள் பகுதியளவில் விடுவிப்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது, 7.5 ஏக்கர் காணி பகுதியளவில் விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அம்மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு, படைமுகாம் அமைக்கப்பட்டுள்ள 19 ஏக்கரையும் வடுவிக்குமாறு, அக் காணியின் உரிமையாளர்களினால், கடந்த 2ஆம் திகதி தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை (04) காலை, இம்மக்களுடைய 7.5 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ள இராணுவம், மிகுதிக் காணிகளை 3 மாத காலத்திலும் பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த காணியை 6 மாத காலத்திலும் விடுவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.