முல்லைத்தீவில் 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது

முல்லைத்தீவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமானது.

மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தந்துகொண்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று காலை 7.00 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ஆரம்பமானது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளிலுள்ள 41 வட்டாரங்களில் 67 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். 134 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறுகின்றது. பொலிஸ் பாதுகாப்புக்களுடன் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றுவருவதாகவும் அவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

இம்முறை 72 ஆயிரத்து 961 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.