முல்லைத்தீவில் 671 ஏக்கர் காணி சுவீகரிப்பு?

முல்லைத்தீவில் 671 ஏக்கர் காணியை சுவீகரிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடற்படைத்தை அமைப்பதற்கு குறித்த நிலம் சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணி மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு திணைக்களத்தின் மேலதிக செயலாளர் சம்பத் சமரகோன் இதற்கான அனுமதியை அளித்துள்ளார் எனத், தெரியவந்துள்ளது.

இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளில் தனியார் காணிகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.