முல்லைத்தீவில் செல் ஒன்று மீட்பு!

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் பகுதியில் காணி ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையில் செல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

சிலாவத்தை தியோநகர் பகுதியில் யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான காணியினை இன்றைய தினம்(15-03-2018) துப்பரவு செய்து உழவு செய்தபோது வெடிக்காத நிலையில் செல் ஒன்று இருப்பதை கண்ட மக்கள் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் வெடிபொருள் உள்ள இடத்தில் நிலைகொண்டுள்ளதோடு அதனை உரியமுறையில் அகற்ற விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதேவேளை யுத்த கால வெடிபொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கானப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]