முல்லைத்தீவில் மலேரியா அபாயம்

மலேரியாக் காய்ச்சல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவும் சாத்தியக் கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பதிகாரி மருத்துவர் வி.விஜிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், மலேரிய நுளம்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டாலும், அது முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் மலேரியாவைப் பரப்பக்கூடிய ‘அனோபிளஸ்’ நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து குறிப்பாக இந்தியா உட்பட பிற நாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் மலேரியா தடுப்பு மருந்து பெறவேண்டும் எனவும் வி.விஜிதரன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]