முல்லைத்தீவில் போராடும் மக்களுக்குப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் நேரில் சென்று ஆதரவு

முல்லைத்தீவில் போராடும் மக்களுக்குப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் நேரில் சென்று ஆதரவு.

முல்லைத்தீவில்

முல்லைத்தீவு மாவட்டத்திலே தமது கிராமத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் வாயிலில் 215 நாட்களைத் தாண்டி தமது பூர்வீக கிராமத்தை விடுவிக்குமாறு கோரித் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கடந்த 30.09.2017 அன்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நேரில் சந்தித்துத் தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் அவர்களது தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

அங்கு மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வட பிராந்தியச் செயலாளர் தோழர் செல்வம் கதிர்காமநாதன் அவர்கள், எந்தவொரு விடயத்திற்காகவும் மக்களே தொடர்ச்சியாகத் தம்மை வருத்திப் போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று தோன்றியுள்ளது.

முல்லைத்தீவில்

மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் மாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முயலாமல், தாம் சொகுசு வாழ்வை அனுபவிப்பதிலும், பதவி இழுபறிகளிலும் குறியாக இருக்கின்ற நிலையில், மக்கள் இருப்பதையும் இழந்து நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எமது உரிமைகளை வென்றெடுக்க பாதிக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.

முல்லைத்தீவில்

வளமான பூர்வீக வாழிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட கேப்பாபுலவு மக்களின் போராட்டம் வெகுவிரைவில் வெற்றியடைய வேண்டும். அந்த வெற்றி வலிகாமம் வடக்கு, இரணைதீவு ஆகிய பகுதிகளில் நிலங்களை விடுவிக்கக்கோரித் தொடர்ச்சியாகப் போராடிவரும் மக்களுக்கு உந்துதலை அளிக்கும் எனவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில்

இவருடன் வன்னி மாவட்டங்களின் செயலாளர் என். பிரதீபன் அவர்களும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதிகளும், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் பிரதிநிதிகளும் மற்றும் புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையத்தினரும் இணைந்து சென்றிருந்தனர்.

முல்லைத்தீவில்

அத்துடன் இவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் காணாமலாக்கப்பட்ட தம் உறவுகளுக்கும் பதில் கூறக் கோரி 205 ஆவது நாளாக இடம்பெற்ற மக்கள் போராட்ட இடத்திற்கும் சென்று அங்கு போராடும் உறவுகளுடன் கலந்துரையாடியதுடன், அவர்களுக்கும் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]