முல்லைத்தீவில் தமிழ் -சிங்கள மீனவர்களுக்கிடையில் முறுகல்

mullaitivu

சிங்கள மற்றும் தமிழ் மீனவர்களிடையே முல்லைத்தீவு – நாயாரு பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு மீனவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க தேவையான நிலங்களைப் பெற, நிளஅளவைத் திணைக்களத்தினர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த போதே, அங்கு பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் மீனவர்கள்எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து, அங்கு இரு தரப்பு மீனவர்களிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, நிலம் அளவிடும் நடவடிகைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் அங்கு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.

அரசியல் நோக்கங்களுக்காக தெற்கில் இருந்து 300 மீனவர்கள் அழைத்து வரப்பட்டு அப்பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அநீதியானது என, அங்குள்ள தமிழ் மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.