முறக்கொட்டான்சேனை அரிசி ஆலை மீண்டும் திறக்கப்படும் : யோகேஸ்வரன் எம்.பி. தெரிவிப்பு

முறக்கொட்டான்சேனை அரிசி ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று யோகேஸ்வரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் பெரிய அரிசி ஆலையாக இருந்த முறக்கொட்டான்சேனை தேவபுரத்தில் உள்ள அரிசி ஆலை ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது குறித்த அரிசி ஆலை முற்றுமுழுதாக அழிவடைந்து செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. அதனை மீள் நடவடிக்கைக்குரிய அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

யோகேஸ்வரன்
யோகேஸ்வரன்

முறக்கொட்டான்சேனை இளஞ்சுடர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு கலை, கலாசார விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த அரிசி ஆலையை மீள செயற்படுத்துவதற்கு பல முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அசிரி ஆலை தொடர்பாக பார்வையிட்டு ஆலோசனை மற்றும் முதலீட்டாளர்களின் திட்டத்தின் கீழ் அரிசி ஆலையை செயற்படுத்த ஏற்பாடுகள் செய்துவருகின்றம்.

மக்களின் அபிவிருத்தி சார்ந்த முதலீடுகளுக்கு எவ்விதமான தடைகளையும் ஏற்படுத்தமாட்டோம். கல்குடா கும்புறுமூலையில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மதுபானசாலை உற்பத்திச் தொழில்சாலை எமது மக்களுக்கு பாதகமான விடயத்தை கொண்டு வருவதனால், அதனை தடுத்து நிறுத்துவதற்கு கூட்டமைப்பு நிற்காது.

மக்களுக்கு பொருத்தமற்ற மதுபான உற்பத்திச் தொழில்சாலை முற்றுமுழுதாக தென் பகுதியிலுள்ள பெரும்பான்மை பணம் படைத்தவர்களினால் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு தென் பகுதியில் இருந்து பல தொழில்சாலைகளை அமைப்பதால் நீண்டகாலத்தில் தமிழ் மக்கள் செரிந்து வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மை சமூகத்தின் இனப் பரம்பலை ஏற்படுத்தும் திட்டங்களையும் ஏற்படுத்தி வருகின்றார்கள.; இதனால் தமிழ் மக்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்.

குறிப்பாக கல்குடா பாசிக்குடாவில் உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளிலும் 60 வீதமானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென தெரிவித்த சுற்றுலாத் துறை விடுதி உரிமையாளர்கள், தற்பொழுது பெரும்பான்மை சமூகத்துக்குத்தான் முதலிடம் வழங்கி வருகின்றார்கள். எமது பிரதேச இளைஞர்களுக்கு சாதாரணமாக ஒரு 5 வீதம் வரையில் தான் வேலை வாய்ப்பு வழங்கியிருக்கின்றார்கள் -என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]