முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் கருணை மனு நிராகரிப்பு

முருகன், சாந்தன், பேரறிவாளன்

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் கருணை மனு நிராகரிப்பு

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இவர்கள் ஏழுபேரும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ளதால், அவர்களை விடுதலை செய்யதற்கு முடிவு செய்த தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டது.

இவர்களின் கருணை மனுவை பரிசீலித்த ஜனாதிபதி ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இந்த தகவலை அவர் தமிழக அரசுக்கும் முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]