முரளிதரனுக்கு பிறகு மிரட்டி வரும் ஹேரத்.

முரளிதரனுக்கு பிறகு மிரட்டி வரும் ஹேரத்.

முத்தையா முரளிதரனுக்கு பிறகு இலங்கை அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரங்கன ஹெரத் பெற்றுள்ளார்.

இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 392 ஓட்டங்களும், அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தென் ஆப்பிரிக்கா அணி 35 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடி வருகிறது.

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 317 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது. இதனால் மிகப்பெரிய இலக்கை இலங்கை அணிக்கு தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் , இலங்கை அணி சற்று நிதானத்துடனே ஆடும் என்று கருதப்படுகிறது.

மேலும் இலங்கை அணியின் வெற்றிகரமான சுழற்பந்து விச்சாளராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். இவர் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி, இலங்கை அணியில் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில்  முதல் இடத்தில் உள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக முன்னாள் வீரரான வேகப்பந்து வீச்சாளர் சமீந்த வாஸ் உள்ளார். இவர் 355 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹெரத் இன்று தென் ஆப்பிரிக்கா வீரர் கெய்ல் அபட்டை வீழ்த்தியதன் மூலம் சமீந்த வாசை பின்னுக்குத் தள்ளி 356 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

முத்தையா முரளிதரனுக்கு பிறகு 38 வயதான ரங்கன ஹெரத் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.