மும்பைக்கு த்ரிஷா, கோவைக்கு ரோஹினி!

மும்பைக்கு த்ரிஷா, கோவைக்கு ரோஹினி!

கடந்த 2008ஆம் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் கதையான ‘1818’ என்ற படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமானார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்நிலையில் கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்த திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க 90களின் பிரபல நடிகை ரோஹினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

கோவையை சேர்ந்த அரவிந்தன் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ‘தெளிவுப்பாதையின் நீச தூரம்’ என்ற தலைப்பு  வைக்கப்பட்டுள்ளது. சந்தோர்ஸ் மற்றும் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஞானப்பன் சிவா, சர்தார், பிரபாகர் சண்முகம் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.

கோவை வெடிகுண்டு குறித்து சுமார் 2 வருடங்கள் ஆய்வு செய்து இந்த வெடிகுண்டு சம்பவம் எதனால் நடத்தப்பட்டது என்பதை தெளிவுபடுத்துவதுதான் இந்த படத்தின் நோக்கமாம்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மற்றும் மதத்தலைவர்கள், இந்த வழக்கை நடத்தும் வழக்கறிஞர்கள் ஆகியோர்களிடம் நேரடியாக சென்று நடந்ததை அறிந்து கொண்டு அதன் பின்னர் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மும்பை குண்டுவெடிப்பு மற்றும் கோவை குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இரண்டு படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருவதும் அதில் த்ரிஷா மற்றும் ரோஹினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.