முப்படையினர் கழிவு அகற்றுபவர்கள் அல்ல – பைசர்

தற்காலத்தில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்கு மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு, உள்ளுராட்சி தேர்தலை தொடர்புபடுத்திக் கொள்வதையே சில பின்னடைவான அரசியல்வாதிகள் வழக்கமாக கொண்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இன்றைய நாட்களில் எந்தபிரச்சினை வந்தாலும் மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சையே சுட்டிக்காட்டுவதற்கு சிலர் முனைகிறார்கள்.

அதற்குள் மேலும் சில விடயங்களையும் ஒன்றிணைந்து போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் முப்படைகளையும் பயன்படுத்தி கழிவுகளை அகற்றி வருவதாக குற்றம்சுமத்துகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று கூற வேண்டும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறான தரக் குறைவான செயற்பாட்டை மேற்கொள்ளாது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

முப்படையினரை அவமானப்படுத்துவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் கழிவகற்றுவதற்காக படையில் இணையவில்லை என அவர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]