முப்படைத் தளபதிகளுடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஜாவிட் பஜ்வா, முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு இராணுவத் தலைமையகத்தில் பாரம்பரிய முறைப்படி, அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதையடுத்து,இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுடன், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வா பேச்சுக்களை நடத்தினார்.

இந்தப் பேச்சுக்களில் பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகளும், இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவரும் கலந்து கொண்டனர்.