முன்னாள் லவ்வரின் கல்யாணத்துக்கு போக ஒன்றல்ல 6 காரணம் இருக்கு!

நமக்கு முன்னாள் நமது முன்னாள் காதலன் அல்லது காதலிக்கு திருமணமாவது கொடுமையிலும் கொடுமையான விஷயம். இப்படி ஒரு சூழ்நிலை நமக்கு வரவே கூடாது என்று நாம் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் வந்துவிட்டால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக யாராக இருந்தாலும் சற்று கஷ்டப்படத்தான் செய்வார்கள்.

ஆனால் உங்கள் முன்னாள் காதலி / காதலன் திருமத்திற்கு செல்வது சந்தோஷமான விஷயம் தான் என்று சொல்ல ஒன்றல்ல இரண்டல்ல ஆறு விஷயங்கள் இருக்கிறது. இது பற்றி தெரியாமல் பலரும் அவரின் திருமணத்தன்று கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்…!

1. நான் சூப்பரா இருக்கேன்!

முன்னாள் காதலி / காதலனின் திருமணத்திற்கு கலக்கலான உடையில் சென்று உங்கள் லவ்வருக்கு அவரது பிரண்ட்ஸ்களும் நான் இந்த காதல் பிரிவுக்கு பின்னர் தான் நல்ல இருக்கேன். நீ என்னை விட்டு சென்றது நல்லது என்று தான் நினைக்கிறேன். நீ சென்றுவிட்டதால் எனக்கு எந்த இழப்பும் இல்லை என பந்தாவாக சென்று அவர்களை கலங்கடிக்கலாம்.

2. நண்பர்களை சந்திக்க சிறந்த இடம்

திருமணம் தான் பழைய நண்பர்களை சந்திக்க சிறந்த இடமாகும். திருமணத்தன்று நடக்கும் பார்டிகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஒருவேளை உங்களை கண் கலங்க வைக்கலாம். நீங்கள் அதற்கு எல்லாம் கலங்காமல் மகிழ்ச்சியாக அந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு நடனமாடுங்கள்…!

முன்னாள் லவ்வரின்

3. புதிய காதலி கிடைக்கலாம்!

திருமணத்தில் நீங்கள் பார்த்து ரொம்ப நாட்களான உங்களது தோழிகளை சந்திக்கலாம் அல்லது புதிய நபர்களை சந்திக்கலாம். ஒருவேளை உங்களை மறைமுகமாக இத்தனை நாட்கள் விரும்பிக்கொண்டவர்களை கூட சந்திக்கலாம். அவர்களுடன் காதல் மலரலாம்.

4. நல்லவர் என்பதை நிரூபிக்கலாம்

சிலர் காதல் பிரிவிற்கு பிறகும் தங்களது முன்னாள் காதலன்/ காதலியுடன் நண்பர்களாக இருக்கின்றனர். நீங்கள் அவருக்கு உண்மையான நண்பராக இருந்தீர்கள் என்றால், அவரது திருமணம் சிறப்பாக நடக்க உங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம். சில வேலைகளை கூட இழுத்து போட்டுக்கொண்டு செய்யலாம்.

முன்னாள் லவ்வரின்

5. மகிழ்ச்சியாக இருக்க சிறந்த இடம்

திருமணம் தான் நீங்கள் நன்றாக சாப்பிட, பாச்சுலர் பார்டிகளை அனுபவிக்க, நடனமாடி மகிழ, நண்பர்களை பார்க்க சிறந்த இடமாகும். திருமணத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தால் இந்த சந்தோஷங்களை எல்லாம் அனுபவிக்க முடியுமா?

முன்னாள் லவ்வரின்

6. நண்பர்களை உருவாக்கலாம்

உங்களால் உங்களது முன்னாள் லவ்வரின் திருமணத்தில் மகிழ்ச்சியாக அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்றால் பரவயில்லை, உங்களை வருத்திக்கொண்டு எதையும் செய்ய வேண்டாம். உங்களை அந்த இடத்தில் எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்பதை மட்டும் பாருங்கள். நிறைய பெண்கள் திருமணத்திற்கு வாருவார்கள்… அவர்களிடம் நட்புடன் பேசி மனதை சமாதானப்படுத்திக்கொள்ளுங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]