முன்னாள் போராளி கைது

முன்னாள் போராளி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட குறித்த முன்னாள் போராளி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் போரின் இறுதியில் கொள்கலன் ஒன்றில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாக கூறிய தகவலின் அடிப்படையிலேயே இலங்கை படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர் இணைந்து தோண்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினமும், நேற்றும் இந்த தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி யார், அவர் எதற்காக கைது செய்யப்பட்டார், யாரால் கைது செய்யப்பட்டார், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]