முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகத்தபால, ஆகிய இருவரின் விளக்கமறியில் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]