முகப்பு News Local News முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்கு பிணை

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்கு பிணை

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகத்தபால, ஆகிய இருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவான் இவர்கள் இருவரையம் இன்று பிணையில் விடுவித்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இவர்கள் இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் இன்றைய தினம் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com