முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு மேல் விசாரணை ஜனவரி 3,4,8,9 ஆகிய தினங்களில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு மேல் விசாரணை எதிர்வரும் 3,4,8,9 ஆகிய தினங்களில்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்; சி.சந்திரகாந்தன் உள்ளிட்ட 6 பேரின் வழக்கு விசாரணை பலத்த பாதுகாப்பின் மத்தியில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த இருதினங்கள் இடம்பெற்ற நிலையில், எதிர்வரும் ஜனவரி 3,4,8,9 ஆகிய தினங்களுக்கு விசாரணைக்கு தவணை வழங்கப்பட்டுள்ளது

குறித்த நபர்களுக்கு எதிராக அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸ்டீன் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நீதவானும் திருகோணமலை மாவட்ட நீதவான் அப்துல்லா மேல் நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு அறையில் சாட்சி பெறப்பட்டதையடுத்து செவ்வாய்கிழமை தொடர் விசாரணைக்கு தவணை வழங்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 விசாரணைகள் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றின் இரு தட்டச்சு உத்தியோகத்தர்களிடம் திறந்த நீதிமன்றில் சாட்சியளித்தனர். இவ்விசாரணைகள் பிற்கல் 3.45 மணிவரை இடம்பெற்ற நிலையில் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் ஜனவரி 3,4,8,9 திகதிகளுக்கு தவணை வழங்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]