முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகிய இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான இருவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

02 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]