முன்னாள் தலைவரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியளில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போதே சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]