முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியிடம் மீண்டும் விசாரணை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்
ஷிரந்தி ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியிடம் மீண்டும் விசாரணை.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் 300 மில்லியன் ரூபா பணம் செலவிட்டு ஆடம்பர வீடு ஒன்று கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட விசாரணைக்கான அறிக்கை தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 7, டொரிங்டன் அவனியூ, இலக்கம் 260/12 என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டினை கொள்வனவு செய்த முறை தொடர்பில் தகவல் வெளியிட ஷிரந்தி தவறியுள்ளார்.

பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]