முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட அவமானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நேற்றையதினம் குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

அவருடன் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சி குழுவினர் குற்ற விசாரணை பிரிவினர் அங்கு சென்றிருந்தனர். கோத்தபாயவும் சென்றிருந்த நிலையில் ஆதரவாளர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஷிரந்தியிடம் விசாரணை மேற்கொள்ளும் போது மஹிந்த மற்றும் சட்டத்தரணிகள் அருகில் இருப்பதற்கு அனுமதி கோரியுள்ளார். எனினும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

தேவை ஏற்படின் குற்ற விசாரணை பிரிவின் வேறு ஒரு இடத்தில் இருப்பதற்கு அனுமதிக்கப்படும் விசாரணை மேற்கொள்ளும் இடத்திற்கு அனுமதிக்க முடியாதென குற்றப் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய மஹிந்த வேறு இடத்தில் நின்ற போது ஷிரந்தி ராஜபக்ச மாத்திரம் விசாரணைக்கான அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இரண்டரை மணித்தியாலங்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]