முகப்பு News Local News முன்னாள் ஜனாதிபதிகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது – துமிந்த திசாநாயக்க

முன்னாள் ஜனாதிபதிகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது – துமிந்த திசாநாயக்க

முன்னாள் ஜனாதிபதிகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வடமத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட உள்ள, நீர்பாசன திட்டம் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு, மகாவலி மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘9 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, உயர் நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பினை வழங்கும் என்பது தெரியாது.

ஆனால் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக அவரால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. அவரால் மட்டுமல்ல சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் அதே நிலைதான்’ என கூறியுள்ளார்.

மேலும ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை மூடிமறைக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சி செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com