முன்னாள் காதலர் மீதான வழக்கை ரத்து செய்ய கால அவகாசம் கேட்கும் ப்ரீத்தி ஜிந்தா

முன்னாள் காதலர் மீதான வழக்கை ரத்து செய்ய கால அவகாசம் கேட்கும் ப்ரீத்தி ஜிந்தா

முன்னாள் காதலரான தொழில் அதிபர் நெஸ் வாடியா மீது தான் தொடர்ந்த வழக்கை ரத்து செய்வது குறித்து பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என பொலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டியின் போது, தொழில் அதிபரும் தன்னுடைய அப்போதைய காதலருமான நெஸ் வாடியா தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார்.

இந்நிலையில், மும்பை பொலிஸார் குறித்த வழக்கில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து நெஸ் வாடியா மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்வது குறித்து பதில் அளிக்குமாறு மும்பை உயர் நீதிமன்றம் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு உத்தரவிட்ட நிலையில் இது குறித்து பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று ப்ரீத்தி கேட்டுள்ளார்.

முன்னாள் காதலர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]