முன்னாள் காதலன் இயக்கும் படத்திற்கு ‘நோ’ சொன்ன நடிகை!!!

முன்னாள் காதலன்

முன்னாள் காதலன் இயக்கும் படத்திற்கு ‘நோ’ சொன்ன நடிகை!!!

நடனப் புயலாக புகழ்பெற்று நடிகராகி பின்னர் இயக்குனராக மாறி இருக்கும் நடிகரும், தற்போது நம்பர் ஒன் நடிகையான லேடி சூப்பர்ஸ்டாரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தார்களாம். திருமணம் வரைக்கும் சென்று இருவரும் பிரிந்தார்களாம். அந்த நடிகை தற்போது சிவன் எனும் பெயர்கொண்ட இயக்குனரை காதலித்து வருகிறாராம்.

இசைப்புயல் பெரிய நடிகரை வைத்து படம் இயக்க முடிவு செய்தாராம். இதற்கு முன்னாள் காதலியை கதாநாயகியாக முயற்சி செய்தாராம். இதற்காக நடிகையிடம் படக்குழுவை சேர்ந்த ஒருவர் தூது போனாராம். நடிகையும் கதை கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.

படக்குழுவினரோ நடிகை அந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகை மறுத்து விட்டாராம். நடன இயக்குனருக்கு முன்பு காதலித்தவரை நான் நண்பராக பார்த்தேன். அதனால், அவருடன் நடித்தேன். ஆனால், நடன இயக்குனரை என் வாழ்க்கையாக பார்த்தேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார். அதனால் அவர் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் நடிகை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]