முன்னாள் காதலனின் திருமணத்தில் பெண் செய்த செயலால் கடுப்பாகி வெளியேறிய மணமகள்- வீடியோ உள்ளே

சீனாவில் தன்னுடைய முன்னாள் காதலனின் திருமணத்துக்கு சென்ற பெண் வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

அது அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது, அந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

திருமண உடையில் வந்த ஒரு பெண் மணமேடையில் தன முன்னாள் காதலனின் காலில் விழுந்து கெஞ்சுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த பெண் மிகவும் மனவேதனையோடு மணமேடையில் தன் முன்னாள் காதலனிடம் தன்னை திரும்ப ஏற்குமாறு சொல்லி கெஞ்சுகிறார், இது முழுவதும் தன் தவறு என்றும் கூறி அழுகிறார்.

மேலும் தனது முன்னாள் காதலரின் கோட்டை பிடித்து இழுக்க அவர் உதறிவிடுகிறார்.

இதனை கண்ட மணப்பெண் கோபத்தில் வெளியேறுகிறார் அவரை பின் தொடர்ந்து மணமகனும் சொல்கிறார்.

இந்த வீடியோ வலைத்தளங்களில் குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]