முன்னாள் இலங்கைத் தூதுவருக்கு மீண்டும் பிடியாணை

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைதுசெய்யுமாறு மீண்டும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவால் இந்த பிடியாணை உத்தவு இன்று பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளிநாட்டுக்குச் சென்ற அவர் மீண்டும் நாடு திரும்பாத நிலையில் அவருக்கு எதிராக ஏற்கெனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பண மோசடி தொடர்பில் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளை அடுத்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மோசடி செய்ததாகக் கூறப்படும் 32,000 இலட்சம் அமெரிக்க டொலர் பணம், இலங்கையில் அவருடைய பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜாலிய விக்ரமசூரிய நீதிமன்றத்தில் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த வழக்கு விசாரணை மே மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]