முன்னாள் இராணுவ பணிப்பாளரின் விளக்கமறில் நீடிப்பு

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

அமல் கருணாசேகர கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால்இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

2008ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெஹிவளை பகுதியில் வைத்து ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]