முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் வழக்கு தாக்கல் – இன்று இலங்கை வருகிறார்

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பிரேஸிலில் யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜகத் ஜயசூரிய தற்போது, பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்க மனித உரிமை குழுக்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.

மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், காணாமல் போதல்கள், சித்திரவதைகள் இடம்பெற்றதாகவும் இந்த சம்பவங்கள் குறித்து ஜகத் ஜயசூரிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரேஸிலில் ஜகத் ஜயசூரியவிற்கு இராஜதந்திர சிறப்புரிமை காணப்படுவதனால், வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

கொலம்பியா, பேரு, சிலி, ஆர்ஜன்டீனா மற்றும் சுரினேம் ஆகிய நாடுகளினதும் தூதுவராக ஜகத் ஜயசூரிய கடமையாற்றுகின்றார்.

இந்த நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்து ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சித்திரவதைகள், குற்றச் செயல்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என ஜகத் ஜயசூரிய கூற முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரேஸில் நீதிமன்றில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று இலங்கை வருவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]