முனைப்பினால் மட்டக்களப்பு கயிறு இழுத்தல் வீரர்களுக்கு military Boots வழங்கிவைப்பு

மட்டக்களப்பு

முனைப்பினால் மட்டக்களப்பு கயிறு இழுத்தல் வீரர்களுக்கு military Boots வழங்கிவைப்பு.

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்புமாவட்ட கயிறு இழுத்தல் வீரர்களுக்கு தேசிய போட்டியில் பங்கு கொள்வதற்காக முனைப்பினால் military Boots வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்புமாவட்ட Tug of War Association ஆல் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே இவ் வீரர்களுக்கு நாளை கிளிநொச்சியில் நடைபெறவுள்ள தேசிய கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொள்வதற்கு இந்த பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்புமாவட்ட Tug of War Association இல் மட்டக்களப்பு, வவுணதீவு, பட்டிப்பளை, செங்கலடி மற்றும் வாகரையைச் சேர்ந்த வீர வீராங்கணைகள் இருப்பதாகவும் இவர்களுக்கு இப் போட்டிக்கு பயன்படுத்துவதற்கானmilitary Boots ஐ பெற்றுக்கொள்வதற்கான வசதி இல்லாததினால் கிளிநொச்சியில் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொள்ள முடியாதுள்ளதாகவும் இப் போட்டியில் கலந்துகொள்ளவதற்கு இவ் வீர வீராங்கணைகளுக்கு பாதணிகளை பெற்றுததரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்தே இப் பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இப் பாதணிகளை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் செயலாளர் இ.குகநாதன் ஆகியோர் வழங்கிவைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மட்டக்களப்பு மட்டக்களப்பு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]