முந்திரிப் பருப்பு தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை அதிரடி முடிவு

முந்திரிப் பருப்பு தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை அதிரடி முடிவு

முந்திரிப் பருப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், ஸ்ரீலங்கன் விமான சேவை அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான முந்திரிப் பருப்பு விநியோகத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அச்சேவை நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவூட்டியதன் பின்னர் நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் முந்திரிப் பருப்பு கொள்வனவு செய்யப்பட்ட போதிலும், தேவையை நிறைவு செய்யும் வகையில் முந்திரிப் பருப்பு விநியோகத்தை முன்னெடுக்க முடியாது போனமை காரணமாக வெளிநாட்டு விநியோகத்தர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச விலைமனு கோரலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் தற்போது கலந்துரையாடி ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மீண்டும் முந்திரிப் பருப்பை விநியோகிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் முந்திரிப் பருப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]