முந்தனையாறு அபிவிருத்தித் திட்டத்துக்கென 145 பில்லியன் அமெரிக்க டொலர்

முந்தனையாறு அபிவிருத்தித் திட்டத்துக்கென 145 பில்லியன் அமெரிக்க டொலர்

 

மட்டக்களப்பு முந்தனையாறு அபிவிருத்தித் திட்டத்துக்கென 145 பில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி ஒதுக்கியிருக்கிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி..எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விவசாய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முந்தனையாறு அபிவிருத்தித்

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர்,

இலங்கையிலிருந்து 7 திட்டங்கள் உலக வங்கிக்கு முன்வைக்கப்பட்டபோதும் அவற்றில் களனி ஆற்றுத்திட்டம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தினால் முன்வைக்கப்பட்ட முந்தனையாறு அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றுக்கே அனுமதிகள் கிடைக்கப்பெற்றள்ளன. அத்திட்டத்தினை தயாரிப்பதற்கு அனைத்து வழிகளிலும் உதவிய திணைக்களங்கள், சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தனையாறு அபிவிருத்தித் திட்டத்துக்கென 145 பில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி ஒதுக்கியிருக்கிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாவட்டத்தில் வருடா வருடம் ஏற்படுகிற வெள்ளம் தடுக்கப்படும். குடிநீர்ப்பிரச்சினை, வரட்சி, ஆற்றுவாய்களின் பிரச்சினைகள், வாழ்வாதாரப்பிரச்சினைகள் என 98 வீதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

கடந்த போகத்தில் நாடு பூராகவும், வரட்சி என்ற காலகட்டத்தில் மத்திய, மாகாண நீர்பாபாசனத்திணைக்களங்கள், மற்றும் கமநல சேவைகள் பிரதிப்பணிப்பாளர் ஆகியோரது நீர் முகாமைத்துவச் செயற்பாட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சி அழிவு ஏற்படவில்லை. அதற்கப்பால் வழமைக்கு மாறான சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளது. இதற்காக மாவட்ட மக்கள் சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விதை நெல்லுக்கான பிரச்சினை தொடர்ந்தும் ஏற்பட்டு வருகிறது. விதை என்பது மிகவும் முக்கியமானதொன்று விதை சரியாக அமையாவிட்டால், நீர் உட்பட சகல வளங்கள், மனித உழைப் என அனைத்துமே வீணாகவே செலவு செய்யப்படும் நிலை உருவாகும். எனவே விதை நெல் விநியோகத்தினை சரியான வகையில் விவசாயிகளுடைய தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முந்தனையாறு அபிவிருத்தித்

விதை நெல் தயார் படுத்துவதற்கான நிலையம் வந்தாறுமூலையில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏற்படும் விதை நெல் தட்டுப்பாட்டுப்பிரச்சினைக்கு அந்த நிலையத்தினைப்பயன்படுத்த முடியும். விவசாயிகள் தூரம் சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்களாயின், தங்களுக்குள் ஒருசிலலை அடையாளப்படுத்தி அவர்கள் ஊடாக இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளலாம். அதன் மூலம் மாவட்டத்தின் விதை நெல் தட்டப்பாட்டைக் குறைப்பதறகும் வெளி இடங்களில் இருந்து வருகை தரும் நிறுவனங்களுக்கு மக்களின் பணம் செல்வதனையும் குறைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதன் போது, விவசாயத்திணைக்களம் மத்திய மற்றும் மாகாணம், நீர்ப்பாசனத்திணைக்களம், கமநல அபிவிருத்தித்திணைக்களம், தேசிய உரச் செயலகம், விதை நெல் தர நிர்ணய சபை, கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களம், தென்னை பயிர்ச்செய்கை, பனை அபவிருத்தி சபை, விவசாய கமநல காப்புறுதி சபை, வனவளத்திணைக்களம், சமூர்த்தி, மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம், நிரக இனங்கள் அபிவிருத்தி அதிகாரசபை, கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்கள் உள்ளிட்டவைகளின் கடந்தகாலச் செயற்பாடுகள் எதிர்கால நடவடிக்கைகள் கூறித்து ஆராயப்பட்டன.

மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பெரும் போக ஆரம்பக்கூட்டங்களை நடத்துவது குறித்தும் விதை நெல் விநியோகம், மானிய உர விநியோகம், நீர்ப்பாசனம் குறித்தும் வங்கிக் கடன்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

இக் கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், உதவி மாவட்டச் செயலாளர் கே.நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முந்தனையாறு அபிவிருத்தித்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]