முத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…!

முத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…!

முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல் நோய் வரை முத்தத்தின் மூலம் பரவுகிறது.

முத்தம் கொடுப்பதால்

 

பொதுவாகவே பாலியல் நோய் என்றால் அவை உடலுறவு மூலம்தான் பரவும் என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் முத்தத்தின் மூலமும் சில பாலியல் நோய்கள் பரவக்கூடும். இந்த பதிவில் முத்தங்கள் மூலம் பரவக்கூடிய நோய்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

ஹெர்பெஸ் என்பது குணப்படுத்த இயலாத தொற்றுநோயாகும். இந்த நோய் பெரும்பாலும் முத்தத்தின் மூலம்தான் பரவும். ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 1 என்னும் இந்த வைரஸ் உங்கள் வாய்ப்பகுதியில் குணப்படுத்த இயலாத புண்களை உண்டாக்கக்கூடும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் நேரடியாக வை வழி முத்தத்தில் ஈடுபடும்போது இந்த நோய் உங்களுக்கும் பரவக்கூடும்.

முத்தம் கொடுப்பதால்

முத்தத்தின் மூலம் கேவிட்டிஸ் ஏற்படும் என்பது பலரும் அறியாத ஒன்று. ஆனால் உண்மையில் இதற்கு வாய்ப்புள்ளது. முத்தமிடும் போது அதன் மூலம் பரவும் பாக்டீரியாக்கள் நுண்குழியை ஏற்படுத்தும். குறிப்பாக இது பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு அதிகம் பரவுகிறது, இளைஞர்களுக்கும் தங்கள் காதலன்/காதலியை முத்தமிடும் போது இந்த பாக்டீரிய தொற்று ஏற்படலாம்.

முத்தம் கொடுப்பதால்

சளி, காய்ச்சல், குடல் தொடர்பான நோய்கள் போன்றவை முத்தங்கள் மூலம் பரவலாம் என பிரபல நாளிதழ் கூறியுள்ளது. இவை சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளாலோ அல்லது சுற்றத்தார் இருமுவதாலோ, தும்முவதாலோ கூட பரவலாம். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர் இன்னொருவரை முத்தமிடும்போது இந்த நோய்கள் அவர்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

முத்தம் கொடுப்பதால்

சிபிலிஸ் என்பது வாயின் உட்புறத்தில் காயங்களை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நிலையில் மற்றவர்களை முத்தமிடுவது மிகவும் ஆபத்தானதாகும். மற்ற நோய்களை போலவே இதுவும் முத்தம் மூலம் பரவும், ஆனால் இதன் பாதிப்பு மற்ற நோய்களை விட அதிகமாக இருக்கும்.

ஹெர்பெஸ் வகையை சேர்ந்த இந்த சைட்டோமெகல்லோவைரஸ் நோயும் முத்தங்கள் மூலம் பரவக்கூடிய ஒன்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரிய வாய்ப்பில்லை. இந்த நோய் தீவிரமடைந்த பின்தான் இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

முத்தம் கொடுப்பதால்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]